Monday, July 24, 2017

6. வெளிநாட்டுக்கு சென்ற நடேசன்

என்னுடைய பாட்டி ராஜாமணி, செல்வா செழிப்பில் வளர்ந்தவர். நாலு வேலி நிலத்துக்கு சொந்தக்காரர் என்று முந்தைய கட்டுரையில் சொல்லி இருந்தேன்.

அவர், தன்னுடைய கணவர் நடேசன், வீட்டோடு மாப்பிளையாக வடசங்கந்தி கிராமத்திற்கு வந்த பிறகு, அவரது மாமனார் சொக்கலிங்கம், கொழுந்தன் ராவுத்தன், நாத்தனார் சட்டமுத்து ஆகியோரையும் வடசங்கந்தி கிராமத்திற்கே வர வைத்தார்.

நாத்தனார் சட்டமுத்துவை தில்லைவிளாகம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தவர், அவருக்கு பிறந்த வீரமாச்சி, முல்லையம்பாள், செண்பகம் ஆகிய மூன்று பெண்களுக்கும், தாய் வீட்டு சீதனங்களை செய்து கொடுத்து கொண்டாடி இருக்கிறார்.

கொழுந்தன் ராவுத்தனுக்கு வடசங்கந்தி கிராமத்தில் வசித்த, கமலம் என்பவரை திருமணம் செய்து கொடுத்து, அவர்கள் தனியாக வசிக்க இடம் கொடுத்து உதவி இருக்கிறார்.

மூத்த மருமகள் ராஜாமணியின் உதவியால், மகள் சட்டமுத்து, மகன்கள் நடேசன், ராவுத்தன் என தன்னுடைய பிள்ளைகளின் வாழ்க்கை செட்டில் ஆனதில் பெரும் மகிழ்ச்சி அடைந்த சொக்கலிங்கம், கோவில் கட்டுவதிலும், கொத்தனார் வேலை செய்வதிலும் ஆர்வம் காட்டினார்.

மகன்கள் விவசாய வேலைகளை கவனிக்க செல்வதால், தன்னுடைய கொத்தனார் வேலைக்கு உதவியாக, ஓரத்தூரில் வசித்த தன்னுடைய கொழுந்தியா மகன்களை உதவிக்கு வைத்துக் கொண்டார். அதனால், அவருடைய கொழுந்தியாள் குடும்பமும் வடசங்கந்தி கிராமத்திற்கு இடம் மாறியது.

மாமனாருக்கு மரியாதை கொடுப்பதில் ராஜாமணிக்கு நிகர் ராஜாமணி. அவர் எடுக்கிற முடிவுகெல்லாம் தன்னுடைய தந்தை காத்த பெருமாளையும், கணவர் நடேசனையும் ஒத்துழைத்து போக சொன்னார்.

பணம் சொக்கலிங்கத்தின் குணத்தை மாற்றியுள்ளது. குடியும் கும்மாளமுமாக இருந்து, சொத்துக்களை பத்துக்களாக மாற்ற காரணமாக இருந்திருக்கிறார்.

தந்தையை தட்டி கேட்க முடியாத நடேசன், ஒரு கட்டத்தில் மனைவி ராஜாமணி அனுமதியுடன் வேலைக்கு வெளிநாடு சென்றிருக்கிறார்

No comments:

Post a Comment