வடசங்கந்தி கிராமத்தின் மேல தெருவில் பெரிய நிலக்கிழார்களாக காத்தபெருமாள், நாராயணன் ஆகிய இருவரும் இருந்தனர்.
அண்ணன், தம்பியான இவர்களுக்கு ஆண் வாரிசுகள் கிடையாது.
அதனால், வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க நல்ல மருமகனை தேடி பல இடங்களில் அலைந்தனர்.
செந்தாமரைக்கண் கிராமத்தில் வாசித்த சொக்கலிங்கம் மகன் நடேசன் என்பவரை, தனது மகள் ராஜாமணிக்கு, மாப்பிள்ளையாக தேர்வு செய்தார், அண்ணன் - காத்த பெருமாள்.
செந்தாமரைக்கண் அருகில் உள்ள மாரிநகரி கிராமத்தில் வசித்த பெரும் நிலக்கிழார் இராமநாதன் என்பவரை, தனது மகள் மீனாட்சி சுந்தரத்திற்கு, மாப்பிள்ளையாக தேர்வு செய்தார், தம்பி - நாராயணன்.
இராமநாதன் – மீனாட்சி சுந்தரம் தம்பதியினருக்கு வாரிசுகள் இல்லை. அதனால், தனது தம்பி, சோமு மகள் அம்பிகாவை எடுத்து வளர்த்தார் இராமநாதன்.
நடேசன் – ராஜாமணி தம்பதியினருக்கு வைரம், விசாலாட்சி என இரு மகள்கள் பிறந்தனர். தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் பிறக்கிறதே? ஆண் வாரிசு இல்லாத குடும்பத்துக்கு ஆண் வாரிசு பெற்றுக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்திய ராஜாமணி, பெரியவர்கள் சொன்ன ஆலோசனைகளை கேட்டு, பல ஏழைகளுக்கு உதவினார். சில கோவில்களுக்கு சென்று வணங்கினார். தவமாய் தவமிருந்து தவபுத்திரனாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்ததும், தங்க தாம்பாளத்தில் குழந்தையை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து, ஏற்கனவே தங்க தாம்பாளம் செய்து வைத்திருந்த ராஜாமணி, பிறந்த குழந்தையை தங்க தாம்பாளத்தில் கொடுத்து, அதை தனது கணவர், நடேசனிடம் கொடுக்க வைத்திருக்கிறார்.
மகனை பார்த்து பூரித்து போனார் நடேசன். மகனின் மகனை பார்த்து உள்ளம் நெகிழ்ந்தார் சொக்கபன் என்கிற சொக்கலிங்கம். குடும்பத்துக்கு ஆண் வாரிசு பெற்றுக் கொடுத்த மகளை கொண்டாடினார் காத்தபெருமாள்.
தங்க தாம்பாளத்தில் வாங்கப்பட்ட அந்த குழந்தைக்கு, பிறகு கோபாலகிருஷ்ணன் என்று பெயர் வைத்தனர்
No comments:
Post a Comment