Monday, July 24, 2017

8. வேலைக்கு சென்ற அப்பா.

தனக்கு எல்லாமுமாக இருந்த தன்னுடைய மனைவி ராஜாமணி இறந்தும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளான, அவரது கணவர் நடேசன், வாழ்க்கை மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்தார். மனைவி இல்லாமல் வாழ்வது அவருக்கு தேவை இல்லாத வாழ்க்கையாக தோன்றி இருக்கிறது.

அதனால், பிடிப்பில்லாத வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். முன்பு போல வெளிநாட்டுக்கு சென்று பணம் தேட ஆர்வமோ, சம்பாதித்து போடா வேண்டும் என்கிற அக்கரையோ, பிள்ளைகள் மீது கவலையோ இல்லாதவராக வாழ்ந்திருக்கிறார்.

காடு எப்போது கூப்பிடும். வீடு எப்போது அனுப்பி வைக்கும் என்று பெரிய எதிர்ப்பார்ப்புடன், எதிலும் ஈடுபாடு இல்லாதவராக படுக்கையில் விழுந்திருக்கிறார்.

தான் உயிரோடு இருந்தவரை தான் பெற்ற தங்க மகன்களை வேலைக்கு செல்ல தடை போட்ட, ராஜாமணி, தன் இறப்புக்கு பிறகு வேலை தேட வேண்டிய கட்டாயத்துக்கு காலம் தள்ளிவிட்டதை அறிய அவர் வாய்ப்பில்லாமல் போனது.

ரயில்வே வேலைக்கு ஆள் எடுத்த போது, தன்னை அழைக்க வந்த நண்பனை, ‘’என் புள்ளையையா வேலைக்கு கூபிடுறே’’ என்று தாய் துரத்தி, விரட்டி அடித்த போதும், வெளிநாட்டில் வேலை செய்ய சித்தப்பா மகன் வைரப்பன் கடிதம் அனுப்பி அழைத்த போதும், தாய் சொல்லை கேட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த என் தந்தை கோபாலகிருஷ்ணன், குடும்பத்தை காப்பாற்ற வேண்டி கட்டாயத்திற்கு ஆளானார்.

மகன்கள் கோவிந்தராஜ், செல்லப்பா இருவருடன் வசிக்கும் பெரிய அக்காள் வைரம், தம்பி அரிகிருஷ்ணன், உடல்நலத்தால் முடங்கிப் போன தந்தை நடேசன் ஆகியோரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், அக்கறையும் அவருக்கு இருந்தது.

எடையூரில் பெரிய மிராசுதாரராக இருந்த கே.பி. அவர்களிடம் சிறிது காலமும், குமாரபுரம் நாராயணன், தியாகராஜன், ஜெகதீசன் ஆகியோரின் குடும்பத்தில் சில காலமும், மணியார் வேலை பார்த்திருக்கிறார்.

அதன் பிறகு, வடசங்கந்தி தீனதயாளு ராஜு அவர்களிடம் மணியார் வேலைக்கு சேர்ந்தவர், கடைசி காலம் வரை அங்குதான் இருந்தார்.

தன்னுடைய தாயின் நிலத்தை ஒழுங்காக சாகுபடி செய்து காப்பாற்ற நினைத்திடாத என்னுடைய தந்தை கோபால கிருஷ்ணன், இரவு பகலாக காட்டிலும், வயல் வெளிகளிலும் கிடந்து உழைத்து, தன்னை நம்பிய தீனதயாளு ராஜூவுக்காக உண்மையாக வாழ்ந்தார். அவரின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் உதவியாக இருந்தார்.

‘’என்னுடை நிலம் எங்கே, எவ்வளவு இருக்கு. சாகுபடிக்கு எவ்வளவு செலவாச்சு, என்ன கண்டு முதல்... இது எதுவும் எனக்கு தெரியாதுப்பா... எல்லா கணக்கும் உங்க அப்பாவுக்குத்தான் தெரியும்.. ‘’ என்று தீனதயாளு ராஜு பெரியப்பா, என்னுடைய தந்தைையைப் பற்றி பெருமையாக கூறுவார்.

தான் இருந்தவரை, அவரை வயல் வெளிக்கு வர அனுமதித்தில்லை என் தந்தை.

அதே போல அவருடைய பனிரெண்டு பிள்ளைகளும், என் தந்தையின் நாணயம் பற்றி குறை கண்டதில்லை. இப்பவும் பார்க்கும் போது என்னுடைய தந்தையைப் பற்றி பெருமையாகத்தான் கூறுவார்கள்.

சீறி வரும் களையாக, கெத்தாக வாழ்ந்த அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் ஏராளமாக உள்ளன. 

7. ராஜாமணியின் மரணம்

வாய்ப்பு கிடைத்திருக்கிறது வாழ்ந்து பார்க்கலாம் என்று என்னுடைய தந்தையின் பாட்டன் சொக்கலிங்கம் வாழ்ந்து பார்த்தார். தான் மட்டும் அப்படி இருக்கக் கூடாது என்று நினைத்தாரோ என்னவோ, துணைக்கு சம்பந்தி, காத்த பெருமாளையும் சேர்த்துக் கொண்டார்.

மாமனாரும், தந்தையும் சேர்ந்து அடிக்கும் கொட்டத்தை என்னுடைய பாட்டி ராஜாமணி, கண்டிக்க முடியாமல் தவித்திருக்கிறார். வெறும் பத்துக்கும், பதினைத்துக்கும் நிலங்களை அடகு வைத்து அவர்கள் கொண்டாடியதை, அவரால் தடுக்க முடியவில்லை.

கணவர் நடேசனின் வெளிநாட்டு சம்பாத்தியத்தில், சில நிலங்களை மீட்டுப் பார்த்தார். இருந்தாலும் முடியவில்லை. 

எங்கள் ஊருக்கும் காரைக்கால் நகருக்கும் நூற்றி ஐம்பது கிலோ மீட்டருக்கு மேல் தூரம் இருந்தது. அப்போது பெரிதாக வாகன வசதிகள் கிடையாது. அதனால், ஒரு குதிரையை வாங்கி, அதில் காரைக்காலுக்கு சவாரி செய்து, வெளிநாட்டு சரக்கு வாங்கி வருவாரம் சொக்கலிங்கம்.

அப்படி, உல்லாச வாழ்க்கை வாழ்ந்த அவர்கள், ஒரு கட்டத்தில் குடலும், உடலும் பாதிக்கப்பட்டு இந்த உலகை விட்டு பிரிந்துவிட்டார்கள்.

மீதம் இருந்த நிலங்களை விற்று, பெரிய மகள் வைரத்தை, பெருகவாழ்ந்தான் அருகே உள்ள பெருடமருதூர் கிராமத்தில் வாழ்ந்த பெரும் நிலக்கிழார் வெங்கிடாசலாம் என்பவரின் மகன், சோமசுந்தரம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார், ராஜாமணி.

இரண்டாவது மகள் விசாலாட்யை உதயமார்தாண்டபுரம் சபாபதி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தவர், மூன்றாவது மகள் செல்வரங்கத்தை, சிறுபனையூர் தம்புசாமி என்பவரின் மகன் சுப்பையாவுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

உடல்நிலை சரியில்லாமல் காலமான மூத்த மருமனின் பதினாறுக்கு சென்ற ராஜாமணி, அப்படியே, கையில் ஒரு குழந்தையையும், வயிற்றில் ஒரு குழந்தையையும் சுமந்து கொண்டிருந்த மூத்தமகள் வைரத்தை, தனது வீட்டுக்கே அழைத்து வந்தார்.

தில்லைவிளாகத்தில் வாசித்த நாத்தனார் சட்டமுத்து, தனது மூத்த மகள் வீரமாட்சியை, அதே தில்லைவிளாகத்தை சேர்ந்த வண்டுத்தேவர் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த போது, தாய் மாமன் வீட்டு சீதனமாக பொன்னும், பொருளும் கொடுத்து உதவிய ராஜாமணி, சட்டமுத்துவின் இரண்டாவது மகள் முல்லையம்பாளை, கடுவெளி அருணாசலம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்த போதும் உதவினார்.

இப்படி தன்னால், முடிந்த உதவிகளை உறவினர்களுக்கு செய்து வந்த ராஜாமணி, நாலு ‘வேலி’ நிலம், நாலு ‘மா’ நிலமாக சுருங்கிய போது, கண்களை மூடினார்.

கடைசி காலத்தில், தனது மகன்கள் கோபாலகிருஷ்ணன், அரிகிருஷ்ணன் இருவருக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க முடியவில்லையே என்கிற பெரிய கவலை ராஜாமணிக்கு இருந்திருக்கிறது.

‘’ஏ... கிழவி, நாலு வேலி நிலத்தை, நாலு மா நிலமாக விட்டு செல்வதாக வருத்தப்பட்டாயே, இதோ... அதே ஊரில்... உன் பேத்தி கௌசல்யா, ஏழு ‘மா’ நிலம் இருந்தவரை திருமணம் செய்து கொண்டு, ஏழு வேலி நிலத்துக்கு சொந்தக்காரியாக உயர்ந்திருக்கிறார் பாரு’’ என்று உரக்க சொல்கிறது என் மனம்.

ஆனால், ‘’அவளும் நான் தானடா’’ என்று, ராஜாமணி திருப்பி சொல்வது போல, அறிவுறுத்துகிறது அதே மனம்.

என்னுடைய பாட்டி ராஜாமணி, எப்பவும் எங்கள் நினைவுகளில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவருடைய குணங்கள், எங்கள் சகோதரியிடம், எங்கள் மகளிடம், எங்கள் பேத்திகளிடம் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

6. வெளிநாட்டுக்கு சென்ற நடேசன்

என்னுடைய பாட்டி ராஜாமணி, செல்வா செழிப்பில் வளர்ந்தவர். நாலு வேலி நிலத்துக்கு சொந்தக்காரர் என்று முந்தைய கட்டுரையில் சொல்லி இருந்தேன்.

அவர், தன்னுடைய கணவர் நடேசன், வீட்டோடு மாப்பிளையாக வடசங்கந்தி கிராமத்திற்கு வந்த பிறகு, அவரது மாமனார் சொக்கலிங்கம், கொழுந்தன் ராவுத்தன், நாத்தனார் சட்டமுத்து ஆகியோரையும் வடசங்கந்தி கிராமத்திற்கே வர வைத்தார்.

நாத்தனார் சட்டமுத்துவை தில்லைவிளாகம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தவர், அவருக்கு பிறந்த வீரமாச்சி, முல்லையம்பாள், செண்பகம் ஆகிய மூன்று பெண்களுக்கும், தாய் வீட்டு சீதனங்களை செய்து கொடுத்து கொண்டாடி இருக்கிறார்.

கொழுந்தன் ராவுத்தனுக்கு வடசங்கந்தி கிராமத்தில் வசித்த, கமலம் என்பவரை திருமணம் செய்து கொடுத்து, அவர்கள் தனியாக வசிக்க இடம் கொடுத்து உதவி இருக்கிறார்.

மூத்த மருமகள் ராஜாமணியின் உதவியால், மகள் சட்டமுத்து, மகன்கள் நடேசன், ராவுத்தன் என தன்னுடைய பிள்ளைகளின் வாழ்க்கை செட்டில் ஆனதில் பெரும் மகிழ்ச்சி அடைந்த சொக்கலிங்கம், கோவில் கட்டுவதிலும், கொத்தனார் வேலை செய்வதிலும் ஆர்வம் காட்டினார்.

மகன்கள் விவசாய வேலைகளை கவனிக்க செல்வதால், தன்னுடைய கொத்தனார் வேலைக்கு உதவியாக, ஓரத்தூரில் வசித்த தன்னுடைய கொழுந்தியா மகன்களை உதவிக்கு வைத்துக் கொண்டார். அதனால், அவருடைய கொழுந்தியாள் குடும்பமும் வடசங்கந்தி கிராமத்திற்கு இடம் மாறியது.

மாமனாருக்கு மரியாதை கொடுப்பதில் ராஜாமணிக்கு நிகர் ராஜாமணி. அவர் எடுக்கிற முடிவுகெல்லாம் தன்னுடைய தந்தை காத்த பெருமாளையும், கணவர் நடேசனையும் ஒத்துழைத்து போக சொன்னார்.

பணம் சொக்கலிங்கத்தின் குணத்தை மாற்றியுள்ளது. குடியும் கும்மாளமுமாக இருந்து, சொத்துக்களை பத்துக்களாக மாற்ற காரணமாக இருந்திருக்கிறார்.

தந்தையை தட்டி கேட்க முடியாத நடேசன், ஒரு கட்டத்தில் மனைவி ராஜாமணி அனுமதியுடன் வேலைக்கு வெளிநாடு சென்றிருக்கிறார்

5. வேலைக்கு அழைத்தவரை விரட்டி அடித்த ராஜாமணி.

வடசங்கந்தி கிராமத்தின் மேல தெருவில், ஐயன் குலத்திற்கு தென் மேற்கு பகுதியில் உள்ள திடலில் ஒரு பெரிய வீடும், அதனை சுற்றி நிலங்களுடன் வசித்து வந்தார் என் பாட்டி ராஜாமணி.

வீட்டை சுற்றி நான்கு பக்கமும் வேளிகள் இருந்தாலும், நான்கரை வேலி நிலத்துக்கு சொந்தக்காரியாக இருந்தார் ராஜாமணி. ஒரு வேலி என்பது ஏழரை ஏக்கர் நிலம்.

வைரம், விசாலாட்சி ஆகிய மகள்களுக்கு பிறகு எனது தந்தை கோபாலகிருஷ்ணன், எனது சித்தப்பா அரிகிருஷ்ணன், எனது சின்ன அத்தை செல்வரங்கம் ஆகிய ஐந்து பிள்ளைகளுக்கு தாயாக வாழ்ந்த ராஜாமணி, தனது பிள்ளைகளை செல்வ செழிப்பில் செல்லமாக வளர்த்திருக்கிறார்.

மூன்றாம் வகுப்பு வரை படித்த என் தந்தை, அதற்கு மேல் படிக்க செல்லவில்லை என்றால் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
வீட்டை சுற்றி நிலம் இருக்கும் போது, தனது பிள்ளைகள் அடுத்தவர்களிடம் கை கட்டி நின்னு வேலை பார்க்கவா போகிறார்கள் என்கிற எண்ணம்.

மத்திய அரசுசின், ரயில்வே வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி எனது தந்தையையும், எனது சித்தப்பாவையும் அழைக்க வந்தவரை, ‘’எம் புள்ளைங்களையா வேலைக்கு கூப்பிடுறே’’ என்று அவரை துரத்தி துரத்தி அடித்திருக்கிறார்.

என்னுடைய தந்தையின் சித்தப்பா மகன் வைரப்பன், வெளிநாடு சென்று வேலை பார்த்த போது, தனது தம்பிகளையும் தன்னுடன் வேலை பார்க்க ஆசைப்பட்டு விசா எடுத்து அனுப்பி இருக்கிறார். 

என் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப மாட்டேன் என்று பிடிவாதம் காட்டி இருக்கிறார் ராஜாமணி.

மூத்த மகள் வைரத்தை பெருடமருதூர் வெங்கிடாசலம் மகன் சோமசுந்தரம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். 

இரண்டாவது மகள் விசாலாட்சியை உதயமார்தாண்டபுரம் சபாபதி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

மூன்றாவது மகள் செலவரங்கத்தை சிறுபனையூர் தம்புசாமி மகன் சுப்பையா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். 

மூத்த மகள் வைரத்தின் கணவர் சோமசுந்தரம், மாரடைப்பால் காலமாக, அடுத்த ஊரில் எனது மகள் இருக்க கூடாது என்று, கையில் ஒரு குழந்தையுடனும், வயிற்றில் ஒரு குழந்தையுடனும் இருந்த வைரத்தை ஊருக்கே அழைத்து வந்திருக்கிறார், ராஜாமணி.

இப்படி பெரிய குடும்பமாக நாலு வேலி நிலமும், நாலு திடலுடனும் வசித்த என் பாட்டி ராஜாமணி, கடைசி காலத்தில், நில மற்றவளாக, ஏழ்மையை அனுபவித்து இறந்திருக்கிறார்

4. தங்க தட்டில் பிறந்த தங்கமகன்

வடசங்கந்தி கிராமத்தின் மேல தெருவில் பெரிய நிலக்கிழார்களாக காத்தபெருமாள், நாராயணன் ஆகிய இருவரும் இருந்தனர். 

அண்ணன், தம்பியான இவர்களுக்கு ஆண் வாரிசுகள் கிடையாது. 
அதனால், வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க நல்ல மருமகனை தேடி பல இடங்களில் அலைந்தனர்.

செந்தாமரைக்கண் கிராமத்தில் வாசித்த சொக்கலிங்கம் மகன் நடேசன் என்பவரை, தனது மகள் ராஜாமணிக்கு, மாப்பிள்ளையாக தேர்வு செய்தார், அண்ணன் - காத்த பெருமாள்.

செந்தாமரைக்கண் அருகில் உள்ள மாரிநகரி கிராமத்தில் வசித்த பெரும் நிலக்கிழார் இராமநாதன் என்பவரை, தனது மகள் மீனாட்சி சுந்தரத்திற்கு, மாப்பிள்ளையாக தேர்வு செய்தார், தம்பி - நாராயணன்.

இராமநாதன் – மீனாட்சி சுந்தரம் தம்பதியினருக்கு வாரிசுகள் இல்லை. அதனால், தனது தம்பி, சோமு மகள் அம்பிகாவை எடுத்து வளர்த்தார் இராமநாதன்.

நடேசன் – ராஜாமணி தம்பதியினருக்கு வைரம், விசாலாட்சி என இரு மகள்கள் பிறந்தனர். தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் பிறக்கிறதே? ஆண் வாரிசு இல்லாத குடும்பத்துக்கு ஆண் வாரிசு பெற்றுக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்திய ராஜாமணி, பெரியவர்கள் சொன்ன ஆலோசனைகளை கேட்டு, பல ஏழைகளுக்கு உதவினார். சில கோவில்களுக்கு சென்று வணங்கினார். தவமாய் தவமிருந்து தவபுத்திரனாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்ததும், தங்க தாம்பாளத்தில் குழந்தையை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து, ஏற்கனவே தங்க தாம்பாளம் செய்து வைத்திருந்த ராஜாமணி, பிறந்த குழந்தையை தங்க தாம்பாளத்தில் கொடுத்து, அதை தனது கணவர், நடேசனிடம் கொடுக்க வைத்திருக்கிறார்.

மகனை பார்த்து பூரித்து போனார் நடேசன். மகனின் மகனை பார்த்து உள்ளம் நெகிழ்ந்தார் சொக்கபன் என்கிற சொக்கலிங்கம். குடும்பத்துக்கு ஆண் வாரிசு பெற்றுக் கொடுத்த மகளை கொண்டாடினார் காத்தபெருமாள்.
தங்க தாம்பாளத்தில் வாங்கப்பட்ட அந்த குழந்தைக்கு, பிறகு கோபாலகிருஷ்ணன் என்று பெயர் வைத்தனர்

Saturday, September 17, 2016

3 - சொக்கப்பன் பரம்பரை

என்னுடைய முப்பாட்டன் பெயர் அரிகிருஷ்ணன், தந்தை சரபோஜி மன்னர் அவையில் வேலை செய்தவர். தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் பெயர் சொக்கலிங்கம்.

மன்னார்குடி தாலுக்கா கெழுவத்தூர் கிராமத்தில் வளர்ந்த சொக்கலிங்கம், செந்தாமரைக்கண் கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார்.

சொக்கலிங்கத்தை எல்லோரும் சொக்கப்பன் என்றுதான் அழைப்பார்களாம். அதனால்தான், என்னை சொக்கப்பன் பரம்பரை என்றே இப்பவும் சிலர் அழைப்பார்கள்.

சொக்கப்பன் என்கிற இந்த சொக்கலிங்கத்திற்கு நடேசன், ராவுத்தன் என இரண்டு மகன்கள். சட்டமுத்து என்கிற ஒரு மகள்.  

மகள் சட்‌டமுத்‌துவை‌ தி‌ல்‌லை‌வி‌ளா‌கம் கிராமத்‌தி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌தா‌ர்‌.

மூ‌த்‌த மகன்  நடே‌சனுக்‌கு பெண் தேடினார்.

திருத்துறைப்பூண்டி தாலுக்கா வடசங்கந்தி கிராமத்தில் காத்தபெருமாள், நாராயணன் என இரண்டு பெரிய மிராசுகள். இருவரும் ஒருதாய் மக்கள். காத்த பெருமாளுக்கு ராஜமணி என்கிற மகள், நாராயணணுக்கு  மீனாட்சி என்கிற மகள்.

ஆண் வாரிசு இல்லாத இவர்களுக்கு, மருமகன்கள் - மறு மகனாக வேண்டும் என்கிற நிலை. இதனால், வீட்டோடு இருக்கிற மாதிரியான நல்ல மாப்பிள்ளைகளை தேடினார்கள்.

எனது  தாத்தா நடேசனின் அருமை, பெருமை, திறமை அறிந்து, எனது ஆத்தா ராஜாமணியை திருமணம் செய்து கொடுக்க முன் வந்தார் அவரது அப்பா மிராசு காத்தபெருமாள்.

நாலு வேலி நிலமும் பெரிய ஓட்டு வீடும் உள்ள வடசங்கந்தி கிராமத்திற்கு மருமகனாக வந்தார் நடேசன்.

மகன் நடேசன், பெரிய மிராசுதார் மருகனாக சென்றதால், சொக்கப்பனும், அவரது இளைய மகன் ராவுத்தனும் கூட வடசங்கந்தி கிராமத்திற்கே வந்து விடுகின்றனர்.

வடசங்கந்தி பக்கி‌‌ரி‌த்‌தே‌வரி‌ன்‌ அத்தையை, இளைய மகன் ராவுத்தனுக்கு திருமணம் செய்து வைக்கிறார் சொக்கப்பன்.

நடேசன், ராஜாமணி தம்பதிக்கு முதலில் பிறந்தது மூன்றுமே பெண் பிள்ளைகள். அதனால், அடுத்து ஆண் வாரிசு பிறக்கும் என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு, அந்த நம்பிக்கையை உண்மையாக்கி பிறந்தவர், எனது தந்தை கோபாலகிருஷ்ணன்.

பிறக்கும் போதே அவரை ஒரு தங்க தட்டில் ஏந்தி வாங்கியதாக ஒரு தகவல் உண்டு. அதன் பிறகு எனது சித்தப்பா அரிகிருஷ்ணன் பிறந்திருக்கிறார்.

சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட சொக்கப்பன், சொத்துக்களை பத்துக்களாக மற்ற காரணமானார். பொண்ணு கொடுத்த சம்பந்தி காத்த பெருமாளையும் குடிக்க வைத்து, வாழ்க்கை பாதையை போதைக்கு திருப்பிவிட்டார்.

சீமை சரக்கு வாங்குவதற்காக நூறு மைல் தூரத்திற்கு அப்பால் உள்ள காரைக்காலுக்கு ஒரு குதிரையில் சென்று வருவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சம்பந்திகள் நிலத்தை அடகு வைத்து அடகு வைத்து குடிக்க, என் தாத்தா நடேசன் வெளிநாடு சென்று சம்பாத்தித்து அந்த நிலங்களை திருப்புவாராம்.
இவர்கள் குடிப்பதை நிறுத்தவில்லை. அவர் வெளிநாடு செல்வதை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் சம்பந்திகள் இருவரின் உயிரையும் அந்த குடி, குடித்துவிட்டது.

அப்போது நாலு வேலி நிலமும் நாலுமா நிலமாக மாறிப் போனது.

நிலங்களை யார் யாருக்கெல்லாம் விற்றார்கள் என்கிற பத்திரங்கள் மட்டும் ஒரு காக்கி உரையில் போட்டு பத்திரமாக  வைத்திருந்தார்கள்.
பாட்டன் சொத்து பேரனுக்கு என்பார்கள். இங்கு சொத்துக்கு பதில், நிலம் விற்ற பத்திரங்கள்?

பாட்டன் ஞாபகமாக இது மட்டும் எதற்கு என்று, கோபத்தில் ஒரு நாள் அந்த பத்திரங்களை கிழித்து எறிந்தார் எனது அண்ணன்.

Friday, April 15, 2016

2 - எனது ஊரின் பெயர் வடசங்கந்தி

ஐயன் குளம் 
எனது ஊரின் பெயர் வடசங்கந்தி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, எனது கிராமம்

திருத்துறைப்பூண்டி டூ பட்டுக்கோட்டை பஸ் மார்க்கத்தில் சங்கேந்தி கிராமத்தில் இறங்கி வடக்கே மூன்று கிலோ மீட்டர் வடசங்கந்தி செல்ல வேண்டும்.

120 வே‌லி‌ நி‌லத்‌தி‌ல்‌ அமை‌ந்‌துள்‌ளது வடசங்‌கந்‌தி‌ கி‌ரா‌மம்‌. கி‌ழக்‌கே‌ குமா‌ரபு‌ரம்‌ மே‌ற்‌கே‌ கா‌ரை‌கா‌ரன்‌வெ‌ளி‌, தெ‌ற்‌கே‌ சங்‌கே‌ந்‌தி‌, வடக்‌கே‌ ஆரியலூ‌ர்‌ என நா‌ன்‌கு பக்‌கமும்‌ நான்கு கி‌ரா‌மங்‌கள்‌ அமை‌ந்‌துள்‌ளது.

கா‌வி‌ரி‌ ஆற்‌றி‌ன்‌ முக்‌கி‌ய கி‌ளை ‌நதி‌களி‌ல்‌ ஒன்‌றா‌ன வெ‌ண்‌ணா‌ற்‌றி‌லி‌ருந்‌து வடலா‌று, வெட்டாறு, கோரையாறு, பாமணியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலிய ஆறுகள் பிரிகின்றன.

அதி‌ல்‌ நீடாமங்கலம் அருகேயுள்ளது கோரையாறு தலைப்பு. அங்‌கி‌ருந்‌து தட்டாங்கோவில் பிரிவில் இருந்து தி‌ரும்‌பு‌ம்‌ கோ‌ரை‌யா‌று, தே‌வதா‌னம்‌ சட்‌ரஸ்‌ மூ‌லமா‌க எங்‌களுக்‌கு தண்‌ணீ‌ர்‌ தி‌றந்‌து வி‌டுவா‌ர்‌கள்‌. பி‌றகு அந்‌த தண்‌ணீ‌ர்‌ சங்‌கே‌ந்‌தி‌க்‌கும்‌ எங்‌களுருக்குமாக பி‌ரி‌கி‌றது. அது ஒட்‌டங்‌கா‌டு கி‌ரா‌மம்‌‌ அருகே‌ வரும்‌ போ‌து‌, வடசங்‌கே‌ந்‌தி‌, ஆரி‌யலூ‌ர்‌ ஆகி‌ய இரண்‌டு கி‌ரா‌மத்‌துக்‌கும்‌ தனி‌ தனி‌யா‌க பி‌ரி‌கி‌றது.

வடங்‌கந்‌தி‌க்‌கு பெ‌ரி‌ய வா‌ய்‌ககா‌லா‌க வரும்‌ அந்‌த அந்‌த வா‌ய்‌ககா‌லி‌ல்‌ சி‌தம்‌பரத்‌தடி‌ வா‌ய்‌க்‌கா‌ல்‌, வா‌ரி‌யா‌க்‌கோ‌ட்‌டகம்‌ வா‌ய்‌ககா‌ல்‌, மா‌மரத்‌தடி‌ வா‌ய்‌ககா‌ல்‌ என பி‌ரி‌ந்‌து பா‌சனத்‌துக்‌கு உதவு‌கி‌றது.

மே‌ற்‌கே‌ ஆளடி‌கன்‌னி‌, (கன்‌னி‌ என்‌பது ஒரு ஆள்‌ ஓடி‌வந்‌து தா‌ண்‌டும்‌ அளவு‌க்‌கு அகலம்‌ உள்‌ள சி‌று வா‌ய்‌ககா‌ல்‌) கணே‌சபி‌ள்‌ளை‌ பங்‌கு இருக்‌கும்‌ இடத்‌தி‌ல்‌ ஒரு கன்‌னி‌, கை‌பு‌ள்‌ள பங்‌கு உள்‌ள இடத்‌தி‌ல்‌ வடகன்‌னி‌, வை‌த்‌தி‌த்‌தே‌வர்‌ வயலருகே‌ உள்‌ள தச்‌சன்‌ தரி‌சி‌ கன்‌னி‌, பி‌ள்‌ளை‌யா‌ர்‌ கட்‌டளை‌ கன்‌னி‌, மா‌ரி‌யம்‌மன்‌ கோ‌வி‌ல்‌ அருகே‌ உள்‌ள கட்‌டளை‌ கன்‌னி‌ என சி‌ல சி‌று வா‌ய்‌க்‌கா‌ல்‌கள்‌ பா‌சனத்‌துக்‌கு உதவு‌கி‌ன்‌றன.

அருணா‌யி‌ல கட்‌டளை‌, தச்‌சன்‌தரி‌சி‌, பி‌ரசி‌டெ‌ன்‌ட்‌ வயல்‌ ஏரி‌, செ‌ல்‌லை‌யா‌ தி‌டல்‌, வா‌ரி‌யா‌ கோ‌ட்‌டகம்‌, வண்‌ணா‌ன் ‌மே‌டு, பி‌ள்‌ளை‌யா‌ர்‌ கட்‌டளை,‌ மா‌ரி‌யம்‌மன்‌ கோ‌வி‌லடி‌, கா‌னி,‌ ஓடை‌, சி‌தம்‌பரத்‌தடி‌, கி‌ளி‌மூ‌க்‌கு கட்‌டளை‌, ஆத்‌தி‌யடி‌, கீ‌ழவே‌ளி‌ எனறு வயல்‌ பகுதி‌களை‌‌ பி‌ரி‌த்‌து வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌.

ஆரம்‌பத்‌தி‌ல்‌ குடி‌க்‌கவு‌ம்‌, குளி‌க்‌கவு‌ம்‌ பல குளம்‌, குட்‌டை‌கள்‌ பெ‌ரி‌தும்‌ உதவி‌யா‌க இருந்‌தது. மே‌ற்‌கே‌ ஐயன்‌குளம்‌, கி‌ழக்‌கே‌ வளவன்‌குளம்‌, சமா‌தி‌ குளம்‌, பி‌ரசி‌டெ‌ன்‌ட்‌ வீ‌டு பி‌ன்‌பு‌றம்‌ உள்‌ள பட்‌டா‌ணி‌ குளம்‌, வீ‌ரமகா‌ளி‌ கோ‌வி‌ல்‌ குளம்‌, பழைய வீ‌ரமா‌கா‌ளி‌ கோ‌வி‌ல்‌ குளம்‌, வெ‌ள்‌ள குளம்‌, நெ‌ட்‌டி‌ குளம்‌, மறத்‌தெ‌ருவி‌ல்‌ உள்‌ள ரா‌சா‌ங்‌குளம்‌,

சபா‌பதி‌ தே‌வர்‌ வீ‌டு பி‌ன்‌பு‌றமுள்‌ள குட்‌டை‌, மா‌ணி‌க்‌கம்‌பி‌ள்‌ளை‌ வீ‌டு பி‌ன்‌பு‌றமுள்‌ள குட்‌டை‌, பு‌ள்‌ளை‌முழுங்‌கி‌ குட்‌டை‌, அண்‌ணபூ‌ரணி‌‌ குட்‌டை‌, செ‌ல்‌லத்‌துரை‌ குட்‌டை‌, ஏரி‌ என நி‌றை‌ய இருக்‌கி‌ன்றன.

மூ‌லை‌கடை‌ வை‌த்‌தி‌தே‌வர்‌ வீ‌டு பி‌ன்‌பு‌றம்‌ ஒரு குட்‌டை‌ இருந்‌தது. அது இப்‌போ‌து இல்‌லை‌. ஆனா‌ல்,‌ பு‌தி‌தா‌க நடரா‌சன்‌ ஒரு குளத்‌தை‌யு‌ம்‌, மா‌ரி‌நகரி‌ தா‌த்‌தா‌ இடத்‌தி‌ல்‌ ஒரு குளமும்‌, முருகே‌சன்‌ ஒரு குளமும்‌, சரவணன்‌ ஒரு குளமும்‌, வா‌த்‌தி‌யா‌ர்‌ சீத்தாராமன் அத்‌தா‌ன்‌ ஒரு குளமும்‌ அவரவர்‌ இடத்‌தி‌ல்‌ வெ‌ட்‌டி‌ உருவா‌க்‌கி‌ உள்‌ளனர்‌.

கணே‌சபி‌ள்‌ளை‌ தி‌டல்‌ ரெ‌ண்‌டு, மா‌ரி‌நகரி‌யா‌ர்‌ தி‌டல்‌, கி‌ருஷ்‌ணமூ‌ர்‌த்‌தி‌ பி‌ள்‌ளை‌ தி‌டல்‌, வீ‌ரன்‌ வீ‌டு தி‌டல்‌, பண்‌டா‌ரத்‌து தி‌டல்‌, கா‌ரை‌கா‌ரன்‌‌வெ‌ளி‌ அத்‌தே‌ வயலி‌ல்‌ உள்‌ள தி‌டல்‌, தி‌ட்‌டா‌ணி‌ தி‌டல்‌, சி‌லோ‌ன்‌கா‌ர் ‌வீ‌டு தி‌டல்‌, செ‌ல்‌லை‌யா‌ தி‌டல்‌, தி‌ட்‌டா‌ணி‌ தி‌டல்‌, கல்‌லுபெ‌ருக்‌கி‌ தி‌டல்‌, ரா‌வு‌த்‌தன்‌ - அஞ்‌சா‌ன்‌ வீ‌டு அருகே‌ உள்‌ள தி‌டல்‌, பு‌ள்‌ளை‌ மழுங்‌கி‌ குட்‌டை‌ அருகே‌ உள்‌ள தி‌டல்‌, சுந்‌தர்‌ரா‌ஜா‌ வயல்‌ கி‌ட்‌டே‌ உள்‌ள தி‌டல்‌, பழை‌ய வி‌ரமா‌கா‌ளி‌ அம்‌மன்‌ கோ‌வி‌ல்‌ தி‌டல்‌, வீ‌ரமகா‌ளி‌ கோ‌வி‌ல்‌ தி‌டல்‌, பரி‌யா‌ரி‌ தி‌டல்‌, உப்‌பு‌ வீ‌ரன்‌ தி‌டல்‌, எலி‌யன்‌ தி‌டல்‌, கி‌ளி‌மூ‌க்‌கு தி‌டல்‌, மருந்‌துகடை‌ பெ‌ரி‌யப்‌பா‌ வீ‌டு தி‌டல்‌, அடை‌க்‌கப்‌பதே‌வர்‌ தி‌டல்‌, தே‌வர்‌ தி‌டல்‌ என பல தி‌டல்‌கள்‌ உள்‌ளன. அறுவடை‌ கா‌லங்‌களி‌ல்‌ களம்‌ வை‌க்‌க உதவி‌யா‌க இருந்‌தது.

ஆரம்‌பத்‌தி‌ல்‌ கரை‌யோ‌ர நி‌லங்‌களி‌ல்‌ குறுவை‌, தா‌ளடி‌ இரு போ‌கமும்‌, தூ‌ரத்‌து இடங்‌களி‌ல்‌ சம்‌பா‌ சா‌குபடியு‌ம்‌‌ செ‌ய்‌தா‌ர்‌கள்‌. இப்‌போ‌து ஒரு போ‌கம்‌தா‌ன்‌. இங்‌கு நெ‌ல்‌, உளுந்‌து, பச்‌சபயி‌று, பசலி‌ போ‌ன்‌ற தா‌னி‌யங்‌கள்‌ வி‌ளை‌கி‌ன்‌றன.

பு‌ளி‌ய மரம்‌, மா‌ மரம்‌, தெ‌ன்‌ன மரம்‌, மூ‌ங்‌கி‌ல்‌ மரம்‌, வே‌ப்‌பமரம்‌, பூ‌வரசமரம்‌, கி‌ளுவை‌ மரம்‌, பொ‌தி‌ய மரம்‌, முள்‌ளுமுருங்‌கை‌ மரம்‌, ஈச்‌சமரம்‌, பனை‌ மரம்‌, வி‌லா‌ மரம்‌, கருவை‌ மரம்‌, கா‌ட்‌டுகருவை‌ மரம்‌, கூந்‌தபனை‌ என பல மரங்‌கள்‌ வளர்‌கி‌ன்‌றன. அதே‌ போ‌ல செ‌டி‌, கொ‌டி‌, பு‌ல்‌, பூ‌ண்‌டு போ‌ன்‌றவை‌கள்‌ நி‌றை‌ந்‌த கிராமம் அழகான கிராமம் வடசங்கந்தி

ஒவ்‌வொ‌ரு குடும்‌பத்‌துக்‌கும்‌ ஒரு குலதெ‌ய்‌வம்‌ வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌. இருப்‌பி‌னும்‌ ஊரி‌லும்‌ முக்‌கி‌ய தெ‌ய்‌வங்‌களை‌ வை‌த்‌து வணங்‌கி‌ வருகி‌ன்‌றனர்‌. மே‌லத்‌ தெ‌ருவி‌ல்‌ ஐயன்‌ குளம்‌ கரை‌யி‌ல்‌ அமர்‌ந்‌தி‌ருப்‌பவர்‌ வி‌னா‌யகர்‌. இவரை‌ வெ‌ள்‌ளந்‌தா‌ங்‌கி‌ வி‌னா‌யகர்‌ என்‌று பெ‌யர்‌ வை‌த்‌து அழை‌ப்‌பா‌ர்‌கள்‌. கி‌ழத்‌தெ‌ரு கடை‌சி‌யி‌ல்‌ இருப்‌பது மா‌ரி‌யம்‌மன்‌, கா‌ளி‌யம்‌மன்‌ கோ‌வி‌ல்‌. மா‌ரி‌யம்‌மனை‌ ஆகா‌ச மா‌ரி‌யம்‌மன்‌ என்‌று அழை‌ப்‌பா‌ர்‌கள்‌.

கி‌ழக்‌கே‌ வயல்‌கா‌ட்‌டி‌ல்‌ வீ‌ரமா‌கா‌ளி‌ அம்‌மன்‌ கோ‌வி‌லும்‌ அதன்‌ வா‌சலி‌ல்‌‌ கி‌ழக்‌கு பா‌ர்‌த்‌து நி‌ற்‌கும்‌ வீ‌ரன்‌ சி‌லை‌யு‌ம்‌, கொ‌ஞ்‌சம்‌ தள்‌ளி‌ தெ‌ற்‌கு பா‌ர்‌த்‌து நி‌ற்‌கும்‌ சா‌ம்‌பா‌ன்‌ சி‌லை‌யு‌ம்‌ இருக்‌கி‌றது. வடக்‌கே‌ சி‌வன்‌ கோ‌வி‌ல்‌ உள்‌ளது. அங்‌கு பெ‌ரி‌ய லி‌ங்‌கம்‌ சி‌லை‌யு‌ம்‌ அதன்‌ அருகி‌ல்‌ வி‌நா‌யகர்‌, சுப்‌பி‌ரமணி‌யர்‌, அம்‌மன்‌ சி‌லை ஒன்‌றும்‌ உள்‌ளது.

வடக்‌கு தெ‌ருவி‌ல் உள்‌ள கடை‌சி‌ வீ‌ட்‌டி‌ன்‌ எதி‌ரே‌‌ மா‌டனுக்‌கு ஒரு சி‌றி‌ய கோ‌வி‌ல்‌ உள்‌ளது. அங்‌கு உள்‌ள மரத்‌தடி‌யி‌ல்‌ மி‌ன்‌னடி‌யா‌னுக்‌கும்‌, கழுவடை‌யா‌னுக்‌கும்‌ படை‌யல்‌ செ‌ய்‌து வணங்‌குவதை‌ பா‌ர்‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌.
வடக்‌கே‌ பெ‌ரி‌ய வா‌ய்‌க்‌கா‌ல்‌ தா‌ண்‌டி‌ கூந்‌த பனை‌ மரம்‌ உள்‌ள இடத்‌தி‌ல்‌ வே‌ம்‌பை‌யன்‌ கோ‌வி‌ல்‌ உள்‌ளது. அங்‌கும்‌ வே‌ம்‌பை‌யன்‌ குடும்‌பம்‌ வழி‌பட்‌டதா‌க கூறுவா‌ர்‌கள்‌. தெ‌ற்‌கு தெ‌ருவி‌ல்‌ மன்‌மத சா‌மி‌க்‌கு கா‌மண்‌டி‌ தி‌ருவி‌ழா‌ செ‌ய்‌வா‌ர்‌கள்‌.

பள்‌ளி‌க்‌கூடம்‌ பி‌ன்‌னா‌ல்‌ பழை‌ய பட்‌டா‌மணி‌யர்‌ சீ‌னி‌வா‌சரா‌ஜூ‌ அவர்‌களி‌ன்‌ நி‌னை‌வா‌க சா‌மா‌தி‌ கோ‌வி‌ல்‌ உள்‌ளது. அங்‌கு அவரது நி‌னை‌வு‌ நா‌ளி‌ல்‌ குருபூ‌ஜை‌ செ‌ய்‌து வணங்‌கி‌யதை‌ பா‌ர்‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌. அதே‌ போ‌ல மா‌ரி‌யம்‌மன்‌ கோ‌வி‌ல்‌ எதி‌ரே‌ கோ‌வி‌ல்‌ கா‌ளை‌ பு‌‌தை‌த்‌த இடத்‌தி‌ல வி‌ளக்‌கு வை‌த்‌து வணங்‌குவா‌ர்‌கள்‌.

நரசி‌ம்‌மரா‌ஜூ‌ அவர்‌கள்‌ வீ‌ட்‌டு பி‌ன்‌புறம்‌ உள்‌ள வி‌லா‌மரத்‌தடி‌யி‌ல்‌ அம்‌மனை‌ வை‌த்‌து வணங்‌கி‌னா‌ர்‌கள்‌.

தி‌ருவா‌ரூ‌ர்‌ மா‌வட்‌டம்‌ தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ தா‌லுகா‌, முத்‌துப்‌பே‌ட்‌டை‌ ஒன்‌றி‌த்‌தி‌ற்‌குள்‌ இருக்‌கி‌றது எனது வடசங்‌கந்‌தி‌ கி‌ரா‌மம்‌, முன்‌பு‌ தஞ்‌சா‌வூ‌ர்‌ மா‌வட்‌டமா‌க இருந்‌தது. இப்‌போ‌து தி‌ருவா‌ரூ‌ர்‌ மா‌வட்‌டமா‌கி‌வி‌ட்‌டது.

இங்‌கு அகமுடை‌ய தே‌வர்‌, பி‌ள்‌ளை‌, தெ‌லுங்‌கு மொ‌ழி‌ பே‌சும்‌ ரா‌ஜூ‌, வெ‌ள்‌ளா‌ளர்‌, நா‌டா‌ர்‌, நா‌ட்‌டரசர்‌, பள்‌ளர்‌ போ‌ன்‌ற சா‌தி‌ பி‌ரி‌வு‌களை‌ சே‌ர்‌ந்‌த மக்‌கள்‌ வசி‌க்‌கி‌ன்‌றனர்‌. ஆரம்ப கா‌லம்‌ தொ‌ட்‌டு, இன்‌றுவரை‌ சா‌தி‌ய பூ‌சல்‌கள்‌ இங்‌கு வந்‌ததி‌ல்‌லை‌. அனை‌வரும்‌ வயலி‌ல்‌ இறங்‌கி‌ பா‌டுபட்‌டு வா‌ழ்‌பவர்‌கள்‌. எல்‌லோ‌ரும்‌ சி‌றுவி‌வசா‌யி‌கள்‌தா‌ன்‌.

ஆரம்‌பத்‌தி‌ல்‌ பழை‌ய பட்‌டா‌மணி‌யா‌ர்‌ சீ‌னி‌வா‌சரா‌ஜூ‌ பெ‌ரும்‌ நி‌லக்‌கி‌ழா‌ரா‌க வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அதே‌ போ‌ல சுந்‌தர்‌ரா‌ஜூ‌, மங்‌குபதி‌ ரா‌ஜூ‌, நரசி‌ம்‌ம ரா‌ஜூ‌, கி‌ட்‌டு ரா‌ஜூ‌, தீ‌னதயா‌ளுரா‌ஜூ‌, கமலுப்‌பி‌ள்‌ளை‌, மா‌ணி‌க்‌கம்‌ பி‌ள்‌ளை‌, கோ‌வி‌ந்‌தப்‌பி‌ள்‌ளை‌, சுப்‌பை‌யா‌த்‌ தே‌வர்‌, நா‌ரா‌யணதே‌வர்‌, கா‌த்‌தபெ‌ருமா‌ள்‌ தே‌வர்‌, தே‌வர்‌ வீ‌டு, கணபதி‌ நா‌டா‌ர்‌, தெ‌ட்‌சி‌ணா‌மூ‌ர்‌தி‌ தந்‌தை‌ சி‌ங்‌கா‌ரு, ரா‌மன்‌, அஞ்‌சலை‌ குடும்‌பம்‌ போ‌ன்‌றவர்‌கள்‌ பெ‌ரும்‌ மி‌ரா‌சுதா‌ரர்‌களா‌க இருந்‌தா‌ர்‌கள்‌.‌

தற்‌போ‌தை‌ய தகவல்‌ படி‌ ஆண்‌கள்‌ 342, பெ‌ண்‌கள்‌ 348 என மொ‌த்‌தம்‌ 690 பே‌ர்‌ வசி‌க்‌கி‌ன்‌றனர்‌

வடசங்கந்தி கிராமத்தின் தலைவராக முதலில் தீனதயாளு ராஜா இருந்தார். அதன் பிறகு க.உலகநாதன், கா.கோவிந்தராஜ், க.உலகநாதன், எம். சண்முகம் (கிட்டு) ஆகியோர் தலைவராக பதவி வகித்தனர். இப்போது எம். உமேஷ் பாபு தலைவராக பதவி வகித்து வருகிறார்.

(மீண்டும் சந்திப்போம்)