சூரியனில் இருந்து வெடித்து சிதறிய பிழம்பு பூமியானது. இங்கு சூரிய ஒளி பட்டது. நெருப்பு குழம்பு ஆவியானது. ஆவி மேகமானது. மேகம் மழையை கொட்டியது. நீர் நிறைந்தது.
350 கோடி ஆண்டுகளுக்கு மன்பு மைக்ரோ பாக்டீரியா, உப்பு படிவம் உருவானதாம். 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமினோ பாக்டீரியா உருவானதாம். 150 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிரினம் ஓரின செயர்க்கை உணவை தயாரித்து, உயிரியல் முன்னர் தோன்றியதாம்.
70 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நியூக்ளிஸ் முதல் விலங்கினம், 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மீன் தோன்றியதாம். 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள். 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதுகலும்பு உள்ள உயிரினம், 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூக்கும் தாவர இனம், 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்,
2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்ராலாயிட்ஸ். இ... இது தாங்க முதல் மனித இனம். 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டிகள். முதலில் நான்கு கால்கள். பிறகு இரண்டு கால்கள். 50 ஆயிரம் ஆண்டுகளாக பரிநாம வளர்ச்சி என்று தொல்லியல் மற்றும் கல்வெட்டு அறிஞர்கள் வந்த வரலாற்றை கூறுகின்றனர்.
பழைய கற்காலத்தில் இருந்து புதிய கற்காலம் வரை 25 ஆயிரம் ஆண்டுகள் நெருப்பின் பயன்பாடு இல்லாமலே வாழ்ந்திருக்கிறார்கள்.
இப்படி மீன் ஆக உருவாகி, பிறகு மீன் தின்றே வாழ்ந்த வாழ்க்கை இது. செடியும் காடும், மழையும், வெயிலும் மனிதனை வழி நடத்தி வந்த வாழ்க்கையைப் பற்றி யோசித்தோமானால் மலைப்பும் வியப்பும் அதிசயமாவும்தான் இருக்கிறது.
அன்று காட்டுவாசியாக குகையிலே, மர பொந்திலே வாழ்ந்து வந்தவன், இன்று ஆடம்பர பங்களாக்களில் வசிக்கிறான். இப்படி அவனது நாகரீகமும் வளர்ச்சியும் முன்னேற்றமும் படித்தோம் என்றால் பிரமிப்பு பிரமிப்பு பிரமிப்பு..
எனது தலைமுறையும், முன்னோர்களும் கூட அந்த காட்டுமிராண்டி கூட்டத்தில் இருந்து தான் வந்திருப்பார்கள். இனக் குழுக்களாக சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள். மன்னர்கள் ஆட்சியிலும் கூட வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஜீன்ஸ் இதோ இன்னும் பரவி பெருகிக் கொண்டே போகிறது.
இதன் தொடக்கம் என்ன?
எனது முன்னோர்கள் தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. தமிழ் பேசி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
நீதிக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற சோழ சாம்ராஜ்யத்தின் ஆட்சியில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்த மண்ணை பொன்னாக்க கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்று உணர முடிகிறது.
சிபி என்னும் மன்னன் இருந்தானாம். அவன் ஒரு புறாவுக்கு தான் அளித்த வாக்கை நிறைவேற்ற அதன் உயிரைக் காக்கத் தன் உடலின் சதையை அறுத்துக் கொடுத்தானாம். அத்தகைய சிபியின் வம்சத்தில் அவனுக்கு பின் தோன்றிய செம்பியன் வம்சத்தினர், ராஜகேசரி, அவரது மகன் பரகேசரி, அவருக்கு பின் வந்த கோ இராஜகேசரி, கோப் பரகேசரி, பசுவுக்கு நீதி வழங்குவதற்காகத் தன் அருமைப் புதல்வனை பலி கொடுத்த மனுநீதிச் சொழன், அவருக்கு பிறகு வந்து இமயம் முதல் இலங்கை வரை ஆட்சி செய்த கரிகால் பெருவளத்தான், இவன் வழியில் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருங்கிள்ளி, கிள்ளிவளவன், கோப்பெருஞ்சோழன், கோச்செங்கணான், பெருநற்கிள்ளி என பலர் இந்த பண்டை தமிழகத்திலே தஞ்சை தமிழர்களை ஆண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆட்சியிலே என் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
சில காலம் பல்லவ, பாண்டிய மன்னர்கள் கைக்கு ஆட்சி சென்றதாம். அதன் பிறகு வந்த விஜயாலய சோழன், அவரது மகன் ஆதித்த சோழன், அவருக்கு பிறகு அவரது மகன் பரந்தாகத் தேவர், இவருக்குப் பிறகு இவரது மகன் கண்டராதித்த தேவர் ஆட்சி செய்தார். அவருக்கு பிறகு கண்டராதித்ததேவரின் அண்ணன் அரிஞ்சய சோழர் மகன் சுந்தரச் சோழன் அரியனை ஏறி திறம்பட ஆட்சி செய்தார். அவரது மகன் ஆதித்த சோழன் சிறிது காலமும், அவரது அண்ணன் கண்டராதித்த தேவரின் மகன் உத்தமச் சோழன் சிறிது காலமும் ஆட்சி செய்தனர்.
பிறகு சுந்தர சோழரின் மகன் ராஜராஜ சோழன், அவருக்கு பிறகு அவரது மகன் ராஜேந்திர சோழன், அதற்கு பிறகு ராஜாதிராஜன், இராசேந்திர சோழன் II, வீரராஜேந்திர சோழன், அதிராஜேந்திர சோழன், சாளுக்கிய சோழர்கள், குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் II, இராசராச சோழன் II, இராசாதிராச சோழன் II, குலோத்துங்க சோழன் III, இராசராச சோழன் III, இராசேந்திர சோழன் III என கி.பி. 848 முதல் கி.பி. 1246-1279 வரை சோழ மன்னர்கள் எம் மண்ணையும், மக்களையும் ஆண்டார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
அதன் பிறகு பாண்டிய ஆட்சியும், 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சியின் இசுலாமிய ஆட்சியும், அதன் பிறகு அவர்களை முறியடித்த விஜயநகர பேரரசின் ஆட்சியும், அதன் பிறகு நாயக்கர் ஆட்சியும் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வப்ப நாயக்கரை தொடர்ந்து, அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், இராமபத்திர நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகியோர் ஆண்டு வந்தனர். இவர்கள் கி.பி.1535 முதல் 1675 வரை 140 ஆண்டுகள் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியை நடத்தி வந்தனர்.
நாயக்கர்களுக்கிடையேயான பிரச்சினைகளை காரணமாக மராட்டியர் ஆட்சி அரியனை ஏறியது. ஏகோஜியை தொடர்ந்து வந்த சகஜி, முதலாம் சரபோஜி, முதலாம் துளஜா என்ற துக்கேஜி, இரண்டாம் எகேஜி (பாவாசாகிப்), சுசான்பாய், பிரதாபசிம்மன், இரண்டாம் துளஜா, அமரசிம்மர், இரண்டாம் சரபோஜி என கி.பி 1676 முதல் 1855 வரையில் ஏறத்தாழ 180 ஆண்டுகள் மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தார்கள்.
அதன் பிறகு மொகலாய ஆட்சி, ஐரோப்பிய ஆட்சி, இந்திய ஆட்சி என எல்லா ஆட்சியிலும் என் முன்னோர்கள் வாழ்ந்து தங்களை வாரிசுகளுடன் நிலை நிறுத்தி வாழ்ந்திருக்கிறார்கள்.
(அடுத்த வாரம் தொடர்வோம்)
No comments:
Post a Comment